Social. Political. Economic. Career| Seyed Ibrahim

Serious issues & ideas. Trusted Sources.

Posts Tagged ‘child

இதில் யாரை குற்றம் சொல்வது – சரி என்ன செய்வது இப்போது

leave a comment »

PTA
அஸ்ஸலாமு அழைக்கும்,
இந்த கட்டுரை ஒரு இணைய தளத்தில் “பெற்றோர்-ஆசிரியர் கழகக்கூட்டம்” நடந்தது என்ற செய்திக்கு கமெண்ட்ஸ் -ஆக நான் கொடுத்த விஷயங்களுக்கு சிறிது கூடுதல் விளக்கம் சேர்த்து  எழுதப்பட்டுள்ளது.இந்த விஷயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் இது போன்ற கூட்டங்களில் பேசப்படும் விஷயங்களும் அதன் முக்கியத்துவமும் தான் , ஏனெனில் இங்கு தான் ஒரு சமுதாயம் உருவாகுகின்றது , உண்மையில் நல்ல ஒரு ஆசிரியரும் நல்ல ஒரு பெற்றோரும் இருந்தால் போதும் இன்ஷா அல்லாஹ் இந்த உலகமும் இந்த சமுதாயமும் மேன்மையை அடைந்து விடும் சீராக ஆகி விடும்.[இது வெறும் வார்த்தை அமைவதற்காக எழுதப்பட்ட வாக்கியங்கள் கிடையாது நண்பர்களே !]
சில தினங்களுக்கு முன்னர் சென்னை-இல் ஒரு CBSE பள்ளியில் இது போன்ற ஒரு கூட்டத்திற்கு சென்று இருந்தேன், அடுத்த வருடம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்காக ஏற்பாடு செயயப்பட்ட ஒரு கூட்டம். அதில் அந்த பள்ளியின் முதல்வர் சொல்லும் விஷயங்கள் என்னை உண்மையில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது . அவர் கூறினார் “ஒரு  4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் எதை  சொல்லகூடாதோ அதை சொல்கிறான் , எதை எழுதக்கூடாதோ அதை எழுதுகிறான்”. இன்றைய மாணவர்கள்[நம் அருமை புதல்வர்கள்/புதல்விகளை இந்த உலகம் மிக அருமையாக ஏமாற்றி சினிமா,ஆபாசம்,வன்முறை,ஒழுக்கசீரழிவு போன்றவற்றின் மூலம் மூளைச்சலவை செய்து (அவற்றை மாணவர்களும்,அனைவர்களும் மிக எளிதில் அணுக முடியும் இப்போது வீட்டினுள் இருந்தவாரே) இதன் மூலம் இந்த உலகம் எதனை எதிர்பார்க்கின்றதோ அதை மிக சாமார்த்தியமாக அடைந்து கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் ஒருவனுக்கு நன்றாக அமைய வில்லை என்றால் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்)   அவனு(ளு)டைய இந்த உலகமும் வீண் மறு உலகமும் வீணாகி விடும்.
இதில் யாரை குற்றம் சொல்வது அந்த 
                                குழந்தையையா   அல்லது 
                                பெற்றோரையா    அல்லது 
                                ஆசிரியறையா     அல்லது 
                                சமுதாயத்தையா அல்லது  இந்த 
                                உலகத்தையா      என்ற பட்டி மன்றம் நமக்கு இப்போது வேண்டாம் ஆனால் இந்த சமுதாயம்(உலகம்) இப்படிதான் மாறி(நாசமாகி) கொண்டே போகும் என்பதும் , அப்படிப்பட்ட நேரத்தில் இந்த குழந்தைகள் வேறு வழி அறியாமல் வழி தவறி விட வாய்ப்பு உள்ளது என்பதும் நாமறிந்ததே, அந்த ஐந்து காரணத்தில் மீதம் உள்ளவர்கள் பெற்றோரும் ஆசிரியருமே ,எனவே அவர்களின் பொறுப்பு மிக இன்றியமையாத ஒன்றும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டிய ஒன்றுமாகும்.
இங்கு எப்படி இந்த உலகம் ஏமாற்றுகிறது என்பதை முழுமையாக பல உதாரணங்களின் மூலமாக சொல்லாமல் , மேலும் அந்த பள்ளியின் முதல்வர் அப்படி என்னதான் சொன்னார் என்பதை நான் சொல்லாமல் பொதுவாக கூறுவது ஏனெனில் உதாரங்களின் மூலம் உங்களின் சிந்தனைகளை நான் சுருக்க விரும்ப வில்லை , இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவருடைய தகுதிக்கும்,அனுபவத்திற்கும் ஏற்றார் போல் உதாரணங்கள் அதிகம் நினைவிற்கு வரும் .
இறுதியாக இதன் மூலம்  நாம்  எதிர்பார்க்க  வேண்டியது  :
1)இது  போன்ற  பெற்றோர்  ஆசிரியர்  கூட்டங்கள்  எல்லா  பள்ளிகளிலும்  எல்லா  வகுப்பு /பிரிவிற்கு  இடையிலும்  நடத்தப்பட  வேண்டும் , அதற்கு  பெற்றோர்கள்  பள்ளி  நிர்வாகத்திடம்  வலியுறுத்த  வேண்டும்  ,மேலும்  ஆசிரியர்களும் இதை  உற்சாகமாக  தங்களின்  கடமையாக , இந்த  மாணவனை /மாணவியை  எப்படியாவது  முன்னேற்ற  பாதைக்கு  கொண்டு  செல்வதற்கு  இது  ஒரு  நல்ல  வழி  என்பதை  கடமை  உணர்ச்சியோடு  ,பொறுப்புணர்வுடன்  இதில்  செயல்  பட  வேண்டும் ,
2)கல்வி  சம்மந்தமாக   மட்டும்  பேசி  விட்டு  களைந்து  விடாமல் ,அத்துடன்  சேர்ந்து  இந்த  சீர்  கெட்டு  கொண்டிருக்கும்  இந்த  உலகத்தில்  எப்படி  பல்முனைதாக்குதல்களில்  இருந்து  நம்  குழந்தைகளை காப்பாற்றி கொள்வது  என்பது  சம்மந்தமாகவும்  பேசப்பட  வேண்டும்
3) இது போன்ற சீர் கேடுகளில் இருந்து ஒரு குழந்தை  தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் முறையான  இறையச்சம் எனும் ஆடை அவர்கள் போடும் சீருடையை போன்று அல்லது அதை விட மேலாக அவர்களுக்கு அவசியம்.அப்போதுதான் என் பெற்றோர் இல்லையெனிலும் என் ஆசிரியர் என்னை பார்க்கவில்லை என்றாலும் என்னை படைத்த இறைவன் என்னை பார்த்து கொண்டிருக்கிறான் என்கின்ற உண்மையான அறிவு போதுமான அளவு அல்லது மிகவும் அதிகமாகவே அந்த மாணவனுக்கு ஊட்டப்பட வேண்டும் .
4)அப்படிப்பட்ட அறிவு கிடைப்பதற்காக பள்ளி வாழ்க்கையில் ஒரு சில நேரம் ஒதுக்கப்பட வேண்டும் , அது போன்ற கல்வி நிறுவனங்களில் நம் குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் குறைந்த பட்சம் (சனி,ஞாயிறு) போன்ற வார விடுமுறை நாட்களில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடந்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டும்.(இது மிகவும் குறைவானதே), நம் குழந்தை ஒரு மருத்துவர் ஆகி விட்டான் ஆனால் ஒழுக்கமும்,மார்க்கமும் அவனிடம் வரவில்லை என்றால்[நாம் இறந்த பின் நமக்காக பிரார்த்தனை செய்து இறுதி தொழுகை நடத்த தெரியவில்லையெனில்] நாம் செலவழித்த அனைத்து செலவும் வீண்,நண்பர்களே!
5)இது  போன்ற  கூட்டங்களுக்கு  Parenting[குழந்தை  வளர்ப்பு] சம்மந்தமாக  ”Experts Lecture” எனப்படும்  திறமை  வாய்ந்த  நிபுணர்கள்  மூலமாக  conselling போன்றவைகளும்  சில  சமயம் [குறைந்தது  3 மாதங்களுக்கு  ஒரு  முறையாவது ] நடத்தப்பட  வேண்டும் .
6)குழந்தைகள்  நம்மிடம்  ஒப்படைக்கப்பட்ட  அமானிதம் , இது  சம்மந்தமாக  மறுமை  நாளில்  நாம்  விசாரிக்கபடுவோம்  என்பதை  முதலில்  பெற்றோரும்  பின்னர்  ஆசிரியர்களும்  உணர்ந்து  அவர்களின்  முன்னேற்றத்தில்  மிகுந்த  கவனத்துடன்  செயல்  பட  வேண்டும் ,
7)குழந்தைகளை  திருத்தும்  முறை , கண்டிக்கும்  விதம்  சம்மந்தமாக  முதலில்  ஆசிரியர்களுக்கும்  பிறகு  பெற்றோருக்கும்  Training Program [பயிற்சி  வகுப்புகள் ] நடத்த  பட  வேண்டும் .
8) இதில்  அந்தந்த  துறையினர் [பள்ளி நிர்வாகம் ,தலைமை  ஆசிரயர் , சக  ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் , மீடியாக்கள் , சமூக  நல  விரும்பிகள் ,மார்க்க  அறிஞர்கள்] தங்களால்  எந்தெந்த  விதங்களில்  ஒத்துழைக்க  முடியுமோ  அவை  அனைத்தையும்  செய்ய  வேண்டும் , ஏனில்  நாம்  ஒரு  நல்ல  மாணவனை  மட்டும் உருவாக்கவில்லை  இங்கு , நல்ல  ஒரு  சமூகத்தை /உலகத்தை  உருவாக்குகின்றோம் , இதன் கூலி மிக்க மகத்தானது .

அல்லாஹ்  நம்  அனைவருக்கும்  இதனை  பயனுள்ளதாக  ஆக்கி  தருவானாக  என்று  ஒவ்வொருவரும்  பிரார்த்திப்போமாக .. ஆமீன்

Written by makabdulrazak84

2013-03-13 at 11:58 PM