Social. Political. Economic. Career| Seyed Ibrahim

Serious issues & ideas. Trusted Sources.

செயல்களின் பலன்கள்: ஒரு ஆட்டோ ஓட்டுநரும், நாமும்

leave a comment »

தெரிந்த ஆட்டோ டிரைவர். ஸ்கூல் முடிக்கவில்லை. மதரசா எல்லாம் போகவில்லை. சுமார் 4 வருடங்களுக்கு முன் அவரே மார்க்கத்தை தப்பாக விளங்கி வைத்திருந்தார். சமூக பிரச்சனைகளையும் சரியாக புரியாமல் இருந்தார். “படித்த” பலரும் இன்னமும் எல்லாவற்றிற்கும் யஹூதிகள் தான் காரணம் என எழுதும்போது, இவரை ஒன்றும் சொல்ல முடியாது.

பெரும்பாலான நாட்களில் குறைந்தது இரண்டு மாற்று மத சகோதரர்களிடம், சவாரி போகும் போது, இஸ்லாத்தை பற்றி மற்றும் முஸ்லிம்களை பற்றிய தப்பான ஊடக பிரசாரங்களை தெளிவு படுத்துகிறார். நோன்பாகட்டும், ISIS விஷயமாகட்டும், இன்னும் பல விடயங்களை அவர் அழகாக புரிய வைத்துள்ளார்.

facebook பற்றி சில மாதங்களுக்கு முன்பு கேட்டார். “அதன் பக்கமே வர வேண்டாம்” என்று சொல்லி காரணங்களையும் சொன்னேன்.

அவருடைய செயல்கள் நிஜ உலகில் பலன் அளிக்கின்றன. சிலரின் எண்ணங்களை மாற்றுகின்றன. நமது போஸ்ட்கள், ஷேர்கள் , ட்வீடுகல் எத்தனை நபர்களின் தப்பான கருத்துக்களை மாற்றியுள்ளன? நிஜத்தில் ஒன்றும் செய்ய முடியாது என நாம் நினைக்கின்றோமா?

Social Media எந்த வகையிலும் பலன் தராது என சொல்லவில்லை. நமக்குளேயே பேசிக்கொண்டிருந்தால் (Email, Facebook, WhatsApp, etc.) அதனால் என்ன பலன்? BBC பற்றிய உங்கள் கருத்துக்களை, BBC-இல் எழுதுங்கள்.

தினமலரை, தினமணியை பற்றி அசிங்கமாக நமது Wall / Timeline-இல் எழுதும் நேரத்தில், அவர்களுக்கே எழுதிவிடலாம். Publish பண்ணுவார்களா என்பதெல்லாம் உங்கள் பொறுப்பு அல்ல. நமது Facebook பக்கத்தில் எழுதினால், அவர்கள் அங்கு வந்து படிக்கப்போகிறார்களா? அவர்களுக்கு “ஆசிரியர் கடிதம்” எழுதினால், PUBLISH / PRINT பண்ணாவிட்டாலும், பத்திரிக்கை குழுவை சார்ந்த, ஒன்று அல்லது இரண்டு பேர்களாவது வாசிப்பார்கள். உங்கள் சொந்தத்தில், நண்பர்கள் வட்டத்தில், பக்கத்துக்கு வீடுகளில் தினமலர் வாங்கினால், அவர்களிடம் போய் “…இந்த காரனங்களிளால் இந்த நாளிதழை வாங்காதீர்கள்” என சொல்லுங்கள்.

http://wp.me/pmMJ0-oQ

 

Advertisements

Written by S Ibrahim

Jan 10, 2016 at 11:56 am

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: