Social. Political. Economic. Career| Seyed Ibrahim

Serious issues & ideas. Trusted Sources.

Letter to President of Kayal Patnam Municipality

leave a comment »

Word Doc Link

PDF Link

மதிப்பிற்குரிய ஹாஜி வாவு அப்துர்ரஹ்மான் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

காயல்பட்னம்.காமில் வந்த செய்திக்கு நமதூர் மக்கள் சில கருத்துக்களை தந்துள்ளார்கள். அதனை தங்கள் மேலான கவனத்திற்கு தருகிறேன்.

செய்தி: பாதாள சாக்கடைத் திட்டம் முதற்கட்ட ஆய்வுப்பணி விரைவில் நடைபெறும்! நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்!!

காயல்பட்டண நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் – அதனடிப்படையில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற ஆரம்ப கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்து 1:

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தூத்துக்குடி ஆன்லைன் வலைதளத்தில் வந்திருக்கும் செய்தியை அடிப்படையாக வைத்து இந்த கருத்தை பதிகிறேன்.

அதாவது பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற ஆரம்ப கட்ட சர்வே பணிகளை மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட ஓட்டெடுப்பு எடுக்கப்பட்டபோது வெறும் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து கையை உயர்த்தியிருக்கிறார்கள் மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

உறுப்பினர்களில் நான்கில் ஒரு பங்கு கூட ஆதரவு இல்லாத நிலையில் எப்படி தீர்மானம் நிறைவேற்றப்படும் ???.

மேலும் கமிஷனர் கண்ணையா அவர்கள் பேசும்போது ” பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது, எனவே கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் ” என்றிருக்கிறார்!!!.

பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கையில் எதை அடிப்படையாக வைத்து இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று கமிஷனர் சொன்னார் என்பது தெரியவில்லை?

பெருபான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேறினால்தான் இத்திட்டப் பணிகளைத் தொடங்க முடியுமே தவிர உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது.

———————————————-

மேலும் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் என்ன சொல்கிறது? ” காயல்பட்டினம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற ஆரம்ப கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ள நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றும்படி வழியுறுத்துகிறது.

ஆரம்பக் கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிரபிக்கவில்லை – மாறாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றும்படியே கடிதம் மூலம் வேண்டியிருக்கிறார்.

இதன் மூலம் நன்கு புலனாகிறது பெரும்பான்மை உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் எதுவும் செய்ய மக்கள் மன்றம் இடம் கொடுக்காது என்பது.

———————————————–

இந்த பாதாள சாக்கடை திட்டத்தினால் ஏற்படும் பல சிக்கல்களையும் அறிந்துணர்ந்த தமிழக முதல்வர் அவர்கள் “பொதுமக்கள் கோரிக்கை வைக்கும் பகுதிகளில் மட்டும், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் “என்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்கள், கடந்த பிப்ரவரியில் செய்தி தாளில் படித்தது.

ஆகவே , நகர் மன்றத்தின் உறுப்பினராக இருந்தாலும் சரி, அதிகாரியாக இருந்தாலும் சரி மக்களின் விருப்பத்திற்கு மாற்றமானதை திணிக்க முயல வேண்டாம்.

வஸ்ஸலாம்.

Posted by: N.S.E. மஹ்மூது (Kayalpatnam)

கருத்து  2:

பாதாள சாக்கடை குறித்து இப்பகுதியில் பல்வேறு கருத்துக்கள் பதியப்பட்டுள்ள நிலையில் நானும் என்பங்கிற்கு சில கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்.

1 ) இத்திட்டம் ஊர் கலாச்சாரத்திற்கு ஊறு விளைவிக்கும் திட்டம்.

2 ) ஊரெங்கும் நாற்றங்கள் வீசும்.

3 ) நான்கு கால்கள் நடமாட்டம் பெருகும்.

4 ) மேலும் குப்பைக் கூளங்கள் சேரும்.

5 ) பிற ஊர்களின் நாற்றங்களும் காயல் வழியாக கடலுக்கு அனுப்பப்படும்.

6 ) ஏற்கனவே உள்ள பிரச்சனைகள் போதாதென இன்னொரு புதிய பிரச்னைக்கு இப்போது வழிகோளப்பட்டுள்ளது.

7 ) ரோடுகளில் இனி எந்த கல்யாண காட்சிகளும் நடத்த முடியாமல் போகும்.

8 ) கையை தூக்காமல் எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்களுக்கு நன்றி.

9 )நகர் மன்றத் தலைவர் கையை உயர்த்தியதற்கு வருத்தங்கள்.

10 ) ஒருசில கருத்துக்கள் துவக்கத்தில் ஆதரித்து பிறகு எதிர்ப்பதற்கான காரணங்களையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

11 ) ஏற்கனவே நகராட்சிப் பணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது போக இது இன்னொரு நல்ல வாய்ப்பு.

12) நிற்க, ஆதரிப்பவர்கள் எதனால் ஆதரித்தனர் என்ற கருத்து இதுவரை இங்கு வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்தால் நலம்.

13 ) நகர் மன்றத்தலைவர் எதனால் கையை உயர்த்தினார்கள். தாமாகவே எடுத்த முடிவா அல்லது நிர்ப்பந்தமா என்பதை அவர்களே சொன்னால் நலம். தாமாகவே எடுத்த முடிவு தானென்றால் அதற்கு எதிராக இங்கு எழுப்பப்பட்டுள்ள ஐயங்களுக்கான விடைதான் என்ன என்பதை தயவு செய்து பதிவு செய்தால் நலம்.

நம்மூருக்கு அருகில் உள்ள திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு தாங்கள் போய் வராதவர்களா, ஊரில் நுழையும் முன்பே நம்மை அந்த நாற்றங்கள் தானே வரவேற்கின்றன. தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

16 ) நகராட்சிக் கூட்டத்தில் அதன் ஆணையாளர் அவர்கள் பெருவாரியான கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் ஏற்கனவே எடுத்து வைத்த முடிவை அறிவித்திருப்பது ஒரு ஜனநாயக கேலிக்கூத்தாக உள்ளது. அவர்களும் அதற்கு பதிலளித்தால் நலம்.

ஐய்யா, நாங்கள் ஐந்து வேலை பள்ளிவாசல் சென்று தொழுது வருபவர்கள். எங்கள் ஆடைகளில் ஒரு சிறு அசுத்தம் இருந்தாலும் இறைவன் அத்தொழுகையை ஏற்றுக்கொள்ள மாட்டான். இது இவ்வாறிருக்க பாதாள சாக்கடையுடன் கூடிய காயல் நகரை மழைக்காலத்தில் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்க்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது ஐயா.

மேலும் அம்மழைக் காலத்தில் (பாதாள)சாக்கடை ஓடும் நகரங்களில் கொசுக்களால் பரவும் -பெயர் தெரியாத அல்லது தங்களைப் போன்ற ஆணையர்கள் பெயர் வைக்கத் திணறும்- புதுப்புது நோய்களை நினைத்தாலே எங்கள் உடலும் உள்ளமும் நடுங்குகிறது ஐயா. எங்களின் இந்த ஐயங்களுக்கு பதிலளிப்பீர்களா ஐயா.

அது போல அன்பு அண்ணன்கள் காசிராஜனும் திருத்துவராஜ் அவர்களும் தாங்கள் ஊரே எதிர்க்கும் இந்த திட்டத்திற்கு ஏன் ஆதரவு தெரிவித்தீர்கள் என்று கூறினால் நலம். உங்களுக்கும் சேர்ந்து தானே இந்த பிரச்னைகள். விளக்கம் தாருங்கள். நம்மை விட்டு சென்று விட்ட நம் முன்னோர்கள் பாக்கியம் மிக்கவர்கள். இந்த அவலங்களை எல்லாம் பார்க்காமலே போய் விட்டார்களே அதனால் தான்.

Posted by: Shameemul Islam SKS (Chennai)

கருத்து  3: நமதூரை பாதாள சாக்கடைக்குள் தள்ளி விட வேண்டாம்..

 

அன்பின் காயல் நகர்மன்றத் தலைவர் அவர்களே ….

பாதாள சாக்கடைத் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் நமதூரை பாதாள சாக்கடைக்குள் தள்ளி விட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். நிறைவேற்ற வேண்டிய எவ்வளோ திட்டங்கள் கிடப்பில் இருக்கும் பொழுது. பல ஊர்களில் கிடப்பில் போட்ட திட்டத்தை இங்கு செயல் படுத்த என்ன அவசியம்.

ஏற்கனவே நமதூர் கடல் நீர் DCW நிறுவனத்தின் கழிவு நீர் கலப்பதால் மாசு பட்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றது மேலும் இதன் மூலம் கேன்சர் பரவுதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றது. ஆகவே புள்ளி வைக்க வேண்டிய இந்த விசயத்தை தயவு செய்து கமா ,,,, போட்டு ஆரம்பித்து விடாதீர்கள்.

Posted by: முத்துவாப்பா (அல்-கோபர்)

Short URL: http://wp.me/PmMJ0-f1

Written by S Ibrahim

Aug 11, 2011 at 12:02 am

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: