Social. Political. Economic. Career| Seyed Ibrahim

Serious issues & ideas. Trusted Sources.

மாணவிகள் & இளம் பெண்கள்: கள்ள காதல் ஓடிப்போதல். தீர்வு என்ன?

leave a comment »

இதற்கு பல காரணங்கள் உண்டு.  மூன்றை மட்டும் சொல்லுகிறேன்

1. வீட்டில் முழுமையான புரிதல் & முக்கியத்துவம் இல்லை

குழந்தைகள் மேல் அன்பு செலுத்தினால் மட்டும் போதாது. குழந்தைகளின் ஆசைகள் என்ன, அவர்களது விருப்பு, வெறுப்பு என்ன, போன்றவற்றை குறுக்கிடாமல் கேட்க வேண்டும் – அது நடக்க முடியாததாக இருந்தாலும் சரியே. அவர்கள் பேசி முடித்தபின்னர் தான் நாம் வாய் திறக்க வேண்டும். பெண் பிள்ளை இருந்து அவள் ரேஸ் (Race) பைக் ஓட்ட ஆசைபட்டால்,  உடனே “என்ன முட்டாள்தனமான பேச்சாக உள்ளது” என சொல்ல வேண்டாம். புன்முறுவலோடு எப்படி ஓட்டுவாய், எத்தனை வயதில் ஓட்டுவாய், எதனால் இந்த ஆசை வந்தது என்றெல்லாம் கேட்டு அவளை புரிந்து கொள்ளுங்கள் . வீட்டில் புரிதல் இல்லாவிடில், அவர்கள் வெளியில் தேடுகிறார்கள்

குழந்தைகளுக்கு மிக சிறந்த நண்பராக பெற்றோர்கள் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு பெற்றோர் மீது முழு நம்பிக்கை வரும் வகையில் தாய் தந்தை நடக்க வேண்டும்

“என் பிள்ளைகள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம்”, “அடிக்கடி என் பெண்ணிடம் பேசிக்கொண்டுதானே இருக்கிறேன்” என்று சொல்பவர்கள், தாங்கள் என்ன Level-ல் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். “நல்லா சாப்பிட்டியா?”, “எத்தனை மார்க் எடுத்திருக்கிறாய்?”, “உனக்கு என்ன வேண்டும்?” , “நான் அனுப்பிய பொருள் நல்ல இருக்கா?” என்பதெல்லாம் CLICHE, “LOOKING FOR FACTS” Level-ல் உள்ள உரையாடல். இவைகளால் மட்டும் பலன் இல்லை. These are needed, but not sufficient. உறவின் ஆழம் அதிகரிக்கட்டும்

இவைகளையும் தாண்டி, நம் பிள்ளைகளின் ஆசைகள், ஐடியாக்கள், உணர்வுகள் (exchanging ideas, thoughts and feelings, Empathy) பற்றிய கலந்துரையாடல்கள் வேண்டும். அவர்கள் எதனை சொன்னாலும், உடனே அதனை குறை கூறுதல், தட்டி கழித்தல், “முட்டாள்தனமானது” போன்ற வார்த்தைகள் – இவைகளை எல்லாம் பெற்றோர் நிறுத்த வேண்டும். உங்களிடம் பரிவு, பாசம், புரிந்துணர்வு கிடைக்காமல் வேறு எங்கோ உங்கள் மகனும் மகளும் அவைகளை தேடுகிறார்கள்.

முக்கியத்துவம்: வெளியில் ஒருவன் “நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது” என (பொய்) சொல்லுகிறான். வீட்டில் “நீ சின்ன பிள்ளை. வாயை மூடு” என தாய் அல்லது தந்தை சொல்லுகிறார். இந்நிலையில் ஒரு பெண் தனக்கு வீட்டில் முக்கியத்துவம் இல்லை என முடிவெடுக்கிறாள்.

பெற்றோர்கள் அப்பெண்ணிடம் முக்கிய விஷயங்களில் (வீடு வாங்குவது / வாடகைக்கு போவது, பள்ளி / கல்லூரி தேர்வு செய்வது, நகை தேர்வு செய்வது, …) ஆலோசனை செய்தால், ஒரு பெண் தனக்கு வீட்டில் முக்கியத்துவம் உள்ளது என உணர்வாள். இந்நிலையில் ஒருவன் “நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது” என சொன்னால், அவளும் “நான் இல்லாமல் எனது பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்க முடியாது” என கூறுவாள்.

2. மார்க்க விஷயங்களை சொல்லுவதில் குறைபாடுகள்

இஸ்லாமிய விஷயங்களை எளிமையாக, Interesting-ஆக நாம் சொல்லுவதில்லை. இஸ்லாமிய புத்தகங்கள் பல படிக்க “போர்” அடிக்கின்றன. நம்மில் எதனை பேர் ரஹீக்-கை ஆர்வத்துடன் முழுமையாக படித்தோம்? ஏன்? (If you read “The Noble Life of the Prophet” http://www.kalamullah.com/noble-life-of-the-prophet.html you’ll start to love reading the seerah of our Prophet)

Favourite Tales from the Quran (http://www.darussalam.in/listing.php?catid=18) போன்ற புத்தகங்களை வாங்கி, நீங்கள் அவர்களுக்கு வாசித்து காட்டுங்கள்

3. சிறு வயதில் ஆடல், பாடல், மேக்-அப், அரைகுறை ஆடை

இவைகள் உங்கள் பிள்ளைகளிடம் இருந்து வெட்கத்தை நீக்கி விடும். வெட்கம் இல்லாதவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். வெட்கம், நாணம் உள்ளவர்கள் கெட்ட விஷயங்களை செய்ய தயங்குவார்கள்.

இதோ 04-ஜூன்-2014 ஆனந்த விகடனில் வந்த பேட்டி:“ஒரு கண்ணு… ரெண்டு கண்ணு… தர்ட்டி கண்ணு..!”


யதோ ஐந்து; படிப்பதோ யு.கே.ஜி. ஆனால், ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சியில் டாப் ஸ்டாராக ஜொலிக்கிறாள் ஸ்வேதா ஸ்ரீ!

… அடிக்கடி, ‘ப்ளீஸ் மம்மி… என் இஷ்டம்போல விட்ருங்களேன். நான் பார்த்துக்கிறேன். இந்த மூடுக்கு இப்படி இருந்தாத்தான், நல்லா இருக்கும்!’ என்று அம்மாவை அதட்டி, கொஞ்சி தன் இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கிறாள்…

”நான், நயன்தாரா மாதிரி போஸ் கொடுக்கவா… காஜல் மாதிரி போஸ் கொடுக்கவா?” என்று ஸ்வேதா கேட்க, ”ஸ்வேதா ஸ்ரீ மாதிரி போஸ் கொடும்மா… அது போதும்!” என்றேன்.

சிரித்துக்கொண்டே சொல்கிறாள் ஸ்வேதா… ”நான் குட் கேர்ள். சும்மா உங்களை டெஸ்ட் பண்ணேன். குட்டிப் பாப்பாலாம் அப்படி போஸ் பண்ண மாட்டங்கனு எனக்குத் தெரியுமே!”


ஒரு குழந்தையின் வளர்ச்சியில், பக்குவத்தில் தாய் மற்றும் தந்தையின் பங்கு மிக அதிகம். ஒரு குடும்பத்துக்கு தந்தை தான் பொறுப்பு. அதனை பற்றி மறுமையில் விசாரிக்கப்படும்போது, “நான் வெளியூரில் இருந்தேன், குடும்பத்தை காப்பாற்ற வெளி நாட்டில் உழைத்தேன்” என்பதெல்லாம் எடுபடுமா என்பதை சிந்திக்கவும். நன்றாக சம்பாதிக்கும் சிலர் கூட குடும்பத்தாரை தங்களுடன் வைப்பது இல்லை.

தந்தைமார்களே! எல்லா தாய்மார்களுக்கும் ஆட்டம், பாட்டம், சிறுமியர்க்கு அரைகுறை ஆடை ஆகியவற்றின் விபரீதங்கள் தெரிவதில்லை. நீங்கள் தக்வாதாரியாக, பொறுப்பை உணர்ந்தவராக இருந்தால் நீங்கள் தான் இவற்றை பற்றி கேள்வி கேட்கவேண்டும்.

பள்ளிகள் (மகதப் மத்ரசாக்கள்), ஆலிம்கள், பள்ளிகூடங்கள், சமூக அமைப்புகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பு உள்ளதுதான். ஆனால், அவைகள் உங்கள் மகளுக்கு லிப்ஸ்டிக் விட்டு விடவில்லை, அசிங்கமான ஆடைகளை அவைகள் வாங்கி உடுத்துவிடவில்லை. இவைகள் எல்லாம் உங்கள் (தந்தை / வாப்பா / அத்தா) சம்பாத்தியத்தில் வந்தவை. உங்கள் காசு எப்படி செலவாகிறது என்பதற்கு நீங்கள் தான் பொறுப்பு

Short URL: http://wp.me/pmMJ0-nh

Advertisements

Written by S Ibrahim

2013-08-17 at 6:17 PM

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: