Social. Political. Economic. Career| Seyed Ibrahim

Serious issues & ideas. Trusted Sources.

கருத்து சுதந்திரம் / சினிமா / விஸ்வரூபம்

with 2 comments

முஸ்லிம்களுக்குச் சகிப்புத் தன்மை இல்லை, ஒரு திரைப்படத் தயாரிப்பாளருக்குக் கருத்துச் சுதந்திரம் கிடையாதா என வினா எழுப்பும் நாம், நம் முதுகைப் பார்ப்பதில்லை. மிக அண்மையில் நாம்தானே டாம்999 திரைப்படத்துக்கு எதிராகப் போராடி அப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட முடியாமல் செய்தோம். வாட்டர் திரைப்படத்துக்கு ஏன் எதிர்ப்புத் தெரிவித்தோம் ? சகிப்புத் தன்மையோ கருத்துச் சுதந்திரமோ நமக்குப் பொருந்தாது அல்லவா ?

டாவின்சி கோட், தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட் போன்றவற்றுக்கும் எதிராகப் போராட்டம் நடந்ததே ? ஓவியர் உசேன் இந்து தெய்வங்களை இழிவு செய்து விட்டார் என்று சொல்லி அவரது ஆர்ட் காலரியைச் சிதைத்தது சகிப்புத் தன்மையாலா அல்லது கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதாலா ?

இந்தி நடிகர் ஃபெரோஸ்கான் திப்புசுல்தானின் வாள் என்ற தொலைக்காட்சித் தொடரை எடுத்து வெளியிட்ட போது, அதற்கு எத்தனை இடையூறுகள் ? நம் நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட மன்னனின் வரலாற்றைச் சொல்லக்கூட விடாமல் இடையூறு செய்து கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்புக் கொடுத்தவர்கள், பிறருக்குக் கருத்துச் சுதந்திரம் பற்றி அறிவுரை கூறுகிறார்கள்.

Source: https://www.facebook.com/Sangairidhvan

In this communication age, 24×7 TV channels and social media are turning into powerful tools. They can even bring about revolutions, as was evident from their role in Arab Spring. Movies like Tare Zameen Par and Rang de Basanti had a great impact on society. TZP triggered a debate on the parenting style in India and RDB appealed to the youth of India to participate in nation-building.

Young India is learning a lot from the media. Stereotyping of a community can plant prejudices in impressionable minds. These prejudices will come to the fore at the slightest provocation or even in the absence of it. I am a great believer in the freedom of speech and expression but I also believe it comes with responsibilities.

Ehtesham Waquarib, Giridih

When innocent Muslims across the world are suffering because of Islamophobia, intellectuals like Kamal Haasan should have avoided making a film connecting Islam and Muslims to terrorism. Leaders of Muslim organisations in India have been continuously issuing statements against terrorism. But they are hardly published. Innocent Muslims are denied houses on rent, suspected for acts they do not commit and rot in jail for years…

Mohamed Ibrahim, Chennai

… Those arguing against the ban say actor Kamal Haasan has invested crores of rupees in the film. The Centre, after spending thousands of crores, had to abandon the Sethu canal project because it hurt the religious sentiments of Hindus. When Dam 999 was banned fearing unrest in Tamil Nadu, there was no such resistance. Why are the minorities described as fringe groups and the entire community blamed when they raise genuine objections?

A. Mohamed Aslam, Madurai

Source: http://www.thehindu.com/opinion/letters/ban-on-film/article4369864.ece

…நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது. அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்? அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்? அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள். ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்? கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை.

…சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில். ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை. ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

சாரு நிவேதிதா – https://www.facebook.com/BAN.viswaroopam.flim

சினிமாவை சினிமாவாக பார்ப்போம்னு சொல்றாங்க,அப்புறம் ஏன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளா சித்தரிக்கனும்?

சினிமாதானே,உண்மையில்லையே ஒரு கற்பனைக்காக என்று இந்துக்களை தீவிரவாதிகளா சித்தரித்து ஒருதடவை எடுக்கலாமே?

முதலில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் சூழல் இங்கு உள்ளதா?இன்னும் முதல்வர்களை தமிழ்சினிமாவில் இருந்தே தேர்ந்தெடுக்கும் மனமுதிர்ச்சியில்தானே தமிழன் இருக்கிறான்?

— மேலூர் ராஜா

1) ஒருவர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் அது அவருடைய கருத்து சுதந்திரம் என்று வாதிடும் நியாயவான்களே டாம்999 படத்தில் முல்லைபெரியாறு ஆணை உடைவதாக கற்ப்பனையாகத்தனே ஒருவன் சித்தரித்தான்.அது அவனுடைய கருத்து சுதந்திரம் ஆனால் அதனை கண்டு கொந்தளித்தவர்களில் நானும் ஒருவன்.அப்போது எழுந்த தமிழனின் கோபம் இதுபோன்றுதான் கொச்சை படுத்தப்பட்டதா?

2)குஜராத் கலவரத்தில் நடந்த கொடுமைகளை மையபடுத்தி எடுக்கப்பட்ட பர்ஜானியா,பிராக் போன்ற படங்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைத்துவிடும் என்று தடைசெய்யபட்டதே அப்போது கருத்துசுதந்திரம் பற்றி பேச யாரும் முன்வரவில்லையே?

3)கமல்ஹாசனின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் நல்லவர்களே இதே கமல் நாளை பகவகீதையை தீவிரவாத நூலாகவும்,கோவில்கள் ஆசிரமங்களை தீவிரவாதபயிற்சி முகாம்களாகவும்,ஹிந்துக்களை தீவிரவாதிகளாகவும் சித்தரித்து படம் எடுத்தால் அதனை கண்டித்து நிச்சயம் பெரும்பாலான ஹிந்து சகோதரர்கள் வீதிக்கு வருவார்கள்.அவர்களை கண்டித்து ஸ்டேடஸ் போட தைரியம் இருக்கிறதா?

4)நம்முடைய கண்களுக்கு வேண்டுமானால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைகளாக தெரியலாம்.ஆனால் அந்நாட்டுமக்களின் பார்வையில் அது ஒரு தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் சுதந்திரப்போர்.அதில் உயிரிழந்த அந்நாட்டு ராணுவத்தினர் தியாகிகள்.கமல்ஹாசன் ஒருவேளை சிங்கள படையின் தளபதியாக பொறுப்பேற்று ஈழப்புலிகளை வேட்டையாடி இலங்கையை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதுபோல் படமெடுத்தால் அதனை இருகரமேந்தி வரவேற்க நீங்கள் தயாரா?

5)சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனியவைத்த 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் நடந்த சம்பங்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு சுவாரஸ்யம் உள்ளவை.ஆனால் அதில் தொடர்புடைய அரசியல் தலைவர்களை மையபடுத்தி ஒரு படம் எடுக்க எந்த சினிமாகாரனிற்க்காவது தைரியம் உள்ளதா?

6)உசாமா இரட்டை கோபுரத்தை தகர்த்தார் என்று சொல்லி லட்சகணக்கான அப்பாவி மக்களின் மீது அமெரிக்கா வீசிய குண்டில் தன் குடும்பத்தை இழந்த அப்பாவி ஆப்கான் இளைஞன் அமெரிக்க ராணுவத்தை பழிக்குபழி வாங்குவதாக படம் எடுத்து அதில் அப்கான் இளைஞனாக நடிக்க கமல் மட்டுமல்ல எந்த கலைகூத்தாடிக்காவது தைரியம் இருக்கா?

7)வெறும் 20 பேர் மிரட்டலுக்கு அரசு பணிந்து படத்தை தடைசெய்வதா?என்று சிறுபிள்ளைதனமாக ஒருவர் கேள்விகேட்க்கிறார்.சுமார் 80 லட்சம் முஸ்லீம் மக்கள் வாழும் தமிழகத்தில் அவர்கள் நடத்தும் போராட்டம் என்பது இவருக்கு இவ்வளவு அற்பமாக தெரிகிறது.முடிவுகளை எடுப்பதில் மிகவும் உறுதியானவர் முதல்வர் ஜே என்பது சிறுபிள்ளைக்குகூட தெரியும்.அப்படி பட்டவர் இந்த விஷயத்தில் இப்படி ஒரு தடை முடிவை எடுத்திருக்கும்போதே அதன் தாக்கம் என்ன என்பது இவருக்கு தெரியவில்லையா?

ஒருவரின் கலைசுதந்திரம் காக்கப்படவேண்டும் என்றுபேச ஒருவேளை மெய்ஞானம் தேவைப்படலாம். ஆனால் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனஉணர்வுகளை புரிந்து கொள்ள கொஞ்சம் மனிதாபிமானம் போதும்.

Source: https://www.facebook.com/pages/Kayalpatnam/112202165460161

திரிஷா படத்தில் தண்ணி அடிச்சா தப்பு.

ரஜினி சிகரட் குடிச்சா தப்பு.

டேம்999ல டேம் உடையர மாதிரி காமிச்சாலும் தப்பு

சண்டியா்னு பேரு வச்சாலும் தப்பு.

குஜராத்தில் விவசாயிகளுக்கு சப்போர்ட் பண்ணா தப்பு. (அமீர்கான் படம் Fanaa குஜராத் முழுவதும் தடை)

Source: https://www.facebook.com/pages/Kayalpatnam/112202165460161

Short URL: http://wp.me/pmMJ0-ly

Advertisements

2 Responses

Subscribe to comments with RSS.

 1. @ a max 35-40 lacs muslims are there.. Not 80 lacs…Dont lie…

  Like

  Raghuram

  2013-02-04 at 12:51 AM

  • Thanks Mr. Raghuram for the comment. I believe you agree with all other points, as you have mentioned only the population count.

   We can get the count from the Census 2011. Irrespective of whether it is 80 lacs or 30 lacs, or even 10 lacs, it is important that we respect one another’s legitimate feelings. If we all start to hate one another, no one would live peacefully.

   Like

   Seyed Ibrahim

   2013-02-04 at 11:11 PM


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: